ரமழான் முதல் நோன்பிலேயே சிலருக்கு கஞ்சி இல்லாமல் போன சம்பவம் ஒன்று இன்று பெருகமைலையில் பதிவாகியுள்ளது.
வருடாந்தம் ரமழான் காலங்களில் பெருகமலை மஸ்ஜிதினால் ஊர் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கஞ்சி, இன்றைய தினம் நேரகாலத்துடன் கொடுத்து தீர்க்கப் பட்டுள்ளதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் புதிய பொறுப்பாளர் நிஸாம் நாநாவிடம் PWA கேட்டபோது, "5 மணிக்கே கஞ்சி பகிரப்படும் என நான் ஊர் மக்களுக்கு ஏற்கனவே சொல்லியிருந்தேன். ஆனால் துரதிஷ்ட வசமாக என்னைக் கேட்காமலே இன்று நேரகாலத்துடன் கஞ்சி பகிரப்பட்டுள்ளது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்." என பதிலளித்தார்.
இது பற்றி கஞ்சி பகிர்ந்த சகோதரர்களிடம் கேட்ட போது, "கடந்த ரமழான்களிலும் 4.30 மணிக்கே கஞ்சி பகிரப்பட்டது. ஊர் மக்களுக்கும் அது நன்றாகத் தெரியும். அதைத்தான் செய்தோம்." என்றனர்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர், நாளை முதல் மீண்டும் கடந்த வருடங்கள் போல் 4.30 மணிக்கு கஞ்சி பகிர தீர்மானித்துள்ளதாக, புதிய பொறுப்பாளர் நிஸாம் நாநா அறிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாக பெருகமலையில் கஞ்சிக்கு பொறுப்பாக இருந்து வந்த "நயீம் நாநா" அவர்கள் சில மாதங்களிற்கு முன்னர் வபாத்தானார் என்பது குறிப்பிடத் தக்கது.
#RAMADAN #HIJRI1435